Introduction


"தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகை செய்வோம் “ என்பதற்கமைய உலகின் மிகவும் பழமையான தலைசிறந்த எமது தாய் தமிழ் மொழியையும், தமிழ் குழந்தைகளின் பாரம்பரிய கலாச்சார, பண்பாட்டையும் கற்க ஒரு தலை சிறந்த நிறுவனமாக  எமது நோத் சீம் பாடசாலை திகழ்கிறது.

எமது பாடசாலையில் தமிழ் , கலை  வகுப்புகள்  தவணை நாட்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 9 மணி தொடக்கம் 2.30 மணி வரை நடைபெறும்.

இங்கு மிகவும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் குழந்தைகளுக்கு பேச்சு, எழுத்து, வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் முகமாக தமிழ் கல்வி கற்பிக்கப்படுகின்றது என மிகவும் பெருமை கொள்கின்றோம்.

இப்பொழுது தமிழ் வகுப்புகள் மழலையர் வகுப்பு தொடக்கம் ஆண்டு 12 வரை கற்பிக்கப்படுகின்றது. அத்துடன் GCSE, GCE A/L தமிழ் பரீட்சைகள் யாவும் Cambridge Examination Board மூலம் எடுக்கப்படும் என்பதையும் மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். நமது குழந்தைகள் நமது கலாச்சார பண்பாடுகளை அறியும் நோக்குடன் விழாக்களையும் நடத்துகின்றோம்.

 

Tamil is one of the ancient classical languages still spoken in the world. At North Cheam Tamil School we teach our children our rich Tamil heritage, culture and language. Tamil and Fine Arts (Carnatic music, Indian classical musical instruments and dance) are taught during term time on Saturdays between 9.00 a.m. to 2.30 p.m.

We can proudly say we have one of the most experienced teachers who teach reading and writing skills to our children. Tamil classes are taught from Reception to Year 12. All GCSE and GCE A / L Tamil examinations will be conducted by the Cambridge Examination Board. We celebrate festivals with the aim of getting our children to understand and appreciate our culture and traditions.